தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் கையாடல்: செயலாளர் கைது - தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்

மாதவனூர் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளர் ரூ.9.50 லட்சம் கையாடல் செய்தது நான்கு ஆண்டுகளுக்குப் பின் நிரூபிக்கப்பட்டுள்ளது.

arrest
arrest

By

Published : Jul 31, 2021, 2:26 PM IST

ராமநாதபுரம்: மாதவனூர் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளராகப் பணியாற்றியவர் கவிநாதன். இவர் மாதவனூரில் 2014 ஏப்பரல் முதல் 2017 செப்படம்பர் வரை பணியாற்றினார்.

இந்தக் காலகட்டத்தில் கவிநாதன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, வட்டி செலுத்தியதாக ரூ.5.46 லட்சம், செயலாளருக்கு கூடுதல் சம்பளம் செலுத்தியதாக ரூ.2,677, நகைக்கடன் பணம் செலுத்தியதாக ரூ.75 ஆயிரம், பண பரிவர்த்தனையில் விடுதல் ரூ.55 ஆயிரம், உர விற்பனை தொகை ரூ.1.93 லட்சம் என ரூ.9.50 லட்சம் கையாடல் செய்ததாக துணைப் பதிவாளர் கோவிந்த ராஜன் வணிக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.

கைதான கவிநாதன்

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கவிநாதனை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details