ராமநாதபுரம் கமுதி, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் கமுதியைச் சேர்ந்த 70 பேர், பேரையூரைச் சேர்ந்த 60 பேர், நீராவியைச் சேர்ந்த 60 பேர் என மொத்தம் 190 பயனாளிகளுக்கு தல 25 கோழிக் குஞ்சுகள் வீதம் 4,750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கோட்டைமேடு கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் ஆ.ரவிச்சந்திரன் தலைமையின் கீழ், நீராவி கால்நடை மருத்துவர் மணிகண்டன் முன்னிலையில் வழங்கப்பட்டன.