தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 25, 2020, 5:44 PM IST

ETV Bharat / state

மீண்டும் திமுக தலைவர் குறித்து கேலி சுவரொட்டிகள்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன.

dmk stalin poster
dmk stalin poster

ராமநாதபுரம் நகர் பகுதியில் கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்தும், தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டியும் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்.,25) மீண்டும் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் இரண்டு வகையான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் தன்னம்பிக்கை மிக்க தலைவர் என்ற பாணியில் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும், துண்டுச்சீட்டு தலைவர் என ஸ்டாலின் படமும் போடப்பட்டிருந்தது.

மற்றொன்றில் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா எனக் குறிப்பிட்டு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் கேலி சித்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்!

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் பேருந்து நிலையம் முன்பாக திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இதே போல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினை இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி போலும், பொதுச்செயலாளர் துரைமுருகனை மங்குனி அமைச்சர் போலும் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கிழிக்கப்பட்ட சுவரொட்டி

இந்த சுவரொட்டிகள் யார் சார்பாக ஒட்டப்பட்டது என்ற விவரங்கள் அதில் இடம்பெறவில்லை. இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. இதை யார் செய்தார் என்று காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தலைவா வா! தலைமை ஏற்க வா!!’ - ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சுவரொட்டி

ABOUT THE AUTHOR

...view details