ராமநாதபுரம்:கமுதி நாடார் பஜாரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு 2021-22 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. எல்.கே.ஜி., முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வகுப்பு வாரியாக மாணவர்களின் தொடர்பு எண்களைக் கொண்டு வாட்ஸ்-அப் குழுக்கள் வகுப்பாசிரியர்களை அட்மினாக கொண்டு செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்றாம் வகுப்பு அ பிரிவுக்கு எனத் தனியாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், இன்று(ஜூன் 19) திடீரென ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோ வந்தது. இதனைக் கண்ட அந்த குழுவில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.