இராமநாதபுர மாவட்டம், ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல்ல உறவினர்கள் ஆட்டோவை அழைத்தனர். ஆனால் தடையை மீறி செல்ல முடியாது என ஆட்டோ டிரைவர் மறுத்துள்ளார். எனினும் கர்ப்பிணி என்பதால், மனம் கேட்காத அந்த ஆட்டோ டிரைவர், திருப்புல்லாணி துணை காவல் ஆய்வாளர் வசந்தகுமாரின் செல் நம்பரை கொடுத்தார். பின், விபரத்தைக் கூறி அனுமதி கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் துணைக்காவல் ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியதும், கர்ப்பிணியை அழைத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின் மருத்துவமனைக்கு வந்ததும் அப்பெண், ஆட்டோ ஓட்டுநரை அனுப்பி வைத்துள்ளார். அப்பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவர், ‘இது சூடு காரணமாக ஏற்பட்ட வலி மட்டுமே, பிரசவ வலி கிடையாது’ எனக்கூறியுள்ளார்.