ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம், வன்னிவயல் பகுதிகளில் இரண்டு குழந்தை திருமணம் நடைபெறவிருப்பதாக ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு (94899 19722) தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பி உத்தரவின் அடிப்படையில் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையிலான தனிப்படையினர் இரு பகுதிகளில் நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறை - காவல்துறை தடுப்பு
ராமநாதபுரம்: ஆர்எஸ் மங்கலம், வன்னிவயல் பகுதிகளில் நடைபெற இருந்த இரண்டு குழந்தை திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Police stopped child marriage in Ramanathapuram
இதுபோன்ற குழந்தை திருமணங்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.