தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் நகை பறித்த திருடனை மடக்கி பிடித்த இளைஞர்கள்! - Ramnad police station

ராமநாதபுரம்: பெண்ணிடம் நகை பறித்து தப்பிச்செல்ல முயன்ற திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்களுக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

உச்சிப்புளி இளைஞர்களை பாராட்டிய காவல் நிலைய ஆய்வாளர்
உச்சிப்புளி இளைஞர்களை பாராட்டிய காவல் நிலைய ஆய்வாளர்

By

Published : Mar 25, 2021, 10:37 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள வெள்ளரி ஓடை அருளொளி ஆத்ம ஞான சபை அருகே சரோஜா என்பவர் கடந்த 21ஆம் தேதி நடந்துசென்றார்.

அப்போது அவரிடமிருந்து ஒரு பவுன் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற திருடனை, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் கபில் தனராஜ், சுரேந்திரன், சுதன் ஆகியோர் துரத்திப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் உச்சிப்புளியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சமயோசிதமாக செயல்பட்டு திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் நான்கு பேரை உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் சால்வை அணிவித்து வெகுவாகப் பாராட்டினார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்: சிறப்பாகச் செயல்பட்ட காவலர்கள்!'

ABOUT THE AUTHOR

...view details