ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் இவரது தொலைபேசிக்கு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், 'உங்கள் ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு எண்ணை தெரிவிக்கவும்' என்று வங்கிப் பணியாளர் போல் பேசியுள்ளார்.
இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தி சேமிப்பு கணக்கு எண்ணை அந்த நபரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெவ்வேறு தேதிகளில் கிருஷ்ணமூர்த்தியின் கணக்கிலிருந்து ரூ.39,980, ரூ.9,990 (இரு முறை), ரூ.39,950 வீதம் என நான்கு தவணைகளில் ரூ.99,968 வரை எடுக்கப்பட்டுள்ளது.