தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா, வாள் பறிமுதல்! - Ramanathapuram District News

ராமநாதபுரம்: கடலாடி அருகே காவல் துறை நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா, வாள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

By

Published : Dec 26, 2020, 10:23 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலையதிற்குள்பட்ட பேச்சியம்மன் கோயில் பகுதியில் கடலாடி- சாயல்குடி சாலையில் கடலாடி காவல் துறை ஆய்வாளர் மோகன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த நபரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, பயங்கர ஆயுதமான வாள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெருநாழி அருகே உள்ள அவத்தாண்டை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் காளிமுத்து என்பது தெரியவந்தது.

பின்னர் அவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, வாள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து காளிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வானூரில் 12 குடிசை வீடுகள் தீயில் கருகி நாசம்!

ABOUT THE AUTHOR

...view details