ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏர்வாடி கிராமத்திலிருந்து டாடா சுமோ வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 400 கிலோ கடல் அட்டைகள் கடத்தியது தெரியவந்தது.
400 கிலோ கடல் அட்டைகளை கடத்தியவர் கைது! - Ramanathapuram
ராமநாதபுரம்: ஏர்வாடி கிராமத்திலிருந்து 400 கிலோ உலர்ந்த கடல் அட்டைகளை கடத்திவந்த ஒருவரை கடலோர காவல் படையினர் கைதுசெய்து, கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
Ramanathapuram
இதையடுத்து கடல் அட்டைகளை கடத்திவந்த நபரை கைது செய்த கடலோர காவல் படையினர் கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த கடல் அட்டைகள் அழிவின் விளிம்பில் உள்ளவை. மென்மையான அமைப்பைக் கொண்ட இவை மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடல் அட்டைகளை பெரும்பாலும் சீனா, தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல வருடங்களாக உணவாக எடுத்துக்கொண்டு வருகின்றனர்.