ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி (26). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, வாள் பறிமுதல்! - crime news
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, வாளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, வாள்
இந்நிலையில், குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் சபரியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி, இரண்டு அடி நீளமுள்ள வாள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எலக்ட்ரானிக் முகக்கவசம்... முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு