ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் குருசடை தீவு கடற்கரை பகுதியில், சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூட்டை கிடப்பதாக மண்டபம் காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
ராமேஸ்வரம் அருகே சாக்கு மூட்டையில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள் - கஞ்சா பொட்டலங்கள்
ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையில் கிடந்த 34 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாக்கு மூட்டையில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீஸ் விசாரணை!
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அலுவலர்கள், சாக்கு மூட்டையைப் பிரித்தபோது அதில், 17 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. பொட்டலாம் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ வீதம் 34 கிலோ கஞ்சா அந்த மூட்டையில் இருந்தது.
கஞ்சாப் பொட்டலங்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு 40 கிலோ கஞ்சா புதுமடம் கடற்கரை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.