ராமநாதபுரம் மாவட்டம், கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். இந்த நிலையில் இவர் கோப்பைகள் மற்றும் சான்றுகளை வைத்துக் கொண்டு, தான் வெளிநாடுகளில் சென்று போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக, கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதாகவும், அதில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வாங்கி வந்ததாகவும் கூறி உள்ளார்.
அது மட்டுமல்லாமல், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி, பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்து கோப்பை உடன் வாழ்த்து பெற்றுள்ளார்.