ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சுற்றி திரிந்து வந்தார். அவர், பொருட்கள் வாங்கும் கடையில் உருது, மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையித்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெயர் அப்துல் வகாப் என்றும் தந்தையின் பெயர் முனாப் எனவும், சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளதாகவும் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
காவி உடை அணிந்து சுற்றித் திரிந்த இஸ்லாமியர் - காவல்துறையினர் தீவிர விசாரணை - தந்தையின் பெயர் முனாப்
ராமநாதபுரம்: ஏர்வாடியில் இந்து சாமியார் போல் வேடமிட்டுச் சுற்றித் திரிந்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்துல் வகாப்
இவர், சாமியார் உடையில் சுற்றித் திரிந்து இரவு நேரங்களில் தர்காவில் உறங்கி வந்துள்ளார். எதற்காகக் காவி உடை அணிந்திருந்தார், எப்படி தமிழ்நாட்டிற்கு வந்தார், ஒருவேளை தீவிரவாதியா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.