தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதித்தவர்களுக்கு உதவி மனிதம் காத்த காவல்துறையினர்!

ராமநாதபுரம்: கரோனா நெருக்கடியில் அவதிப்படும் மனநிலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உதவிய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

மனநலம் பாதித்தவர்களுக்கு உதவி மனிதம் காத்த காவல்துறையினர்!
மனநலம் பாதித்தவர்களுக்கு உதவி மனிதம் காத்த காவல்துறையினர்!

By

Published : Aug 1, 2020, 4:13 PM IST

ராமநாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மனநலம் பாதித்து ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் நபர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, முதுகுளத்தூர் பகுதியில் மனநலம் பாதித்த ஆதரவற்றவர்களுக்கு காவல்துறையினர் உதவி வருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று உணவளிப்பதோடு புத்தாடையையும் அணிவிக்கின்றனர். இது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மனிதம் காத்த காவல்துறை

முதுகுளத்தூர் பகுதியில் நிராதராவாக விடப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த சில நபர்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களுக்கு உணவு அளித்து பசியாற்றுவதோடு முடி திருத்தமும் செய்தனர். சிலருக்கு மொட்டை அடித்து உடல் முழுவதும் சோப்பு போட்டு குளிக்க வைத்து சுத்தம் செய்தனர். பின்னர், காவல்துறையினரே புத்தடைகளை வாங்கி அவர்களுக்கு அணிவித்தனர். இதை ஒரு நாள் சேவையாக இல்லாமல் நாள்தோறும் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்ணுக்கு உணவூட்டிய பெண் காவல் அலுவலர்!

ABOUT THE AUTHOR

...view details