தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்சன் கொலையில் ஐ.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு? மேலும் மூன்று பேர் கைது! - வில்சன் கொலை வழக்கில் மேலும் மூன்று குற்றவாளிகள் சிக்கினர்

ராமநாதபுரம்: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்சன் கொலை வழக்கில் கைதான மூன்று பேர்
வில்சன் கொலை வழக்கில் கைதான மூன்று பேர்

By

Published : Jan 22, 2020, 11:22 PM IST

Updated : Jan 23, 2020, 8:07 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளது. இதில் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகியோர் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் சென்ற மற்றொரு நபர், என்ஐஏவால் தேடப்பட்டு வரும் சேக் அப்துல்லா என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் சமீபத்தில் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பணப் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை உறுப்பினராக இணைத்து மூளை சலவை செய்து, பயிற்சி கொடுத்து, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவத்துவதற்கு இவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.

வில்சன் கொலை வழக்கில் கைதான மூன்று குற்றவாளிகள்

இவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில், வாட்ஸ்அப் குழு அமைத்து இது தொடர்பாகப் பேசி வந்ததும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களையும் அரசியல் தலைவர்களையும் அவதூறாகப் பேசிய ஆடியோக்களும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருப்பதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் இவர்கள் மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

Last Updated : Jan 23, 2020, 8:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details