தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ் - குண்டாஸ்

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கிய நான்கு பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ்
கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ்

By

Published : Aug 1, 2021, 6:28 PM IST

ராமநாதபுரம்:முதுகுளத்தூர் அருகேவுள்ள சின்ன ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரை முன்விரோதம் காரணமாக மேலகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி, அவரது நண்பர்கள் 12 பேர் சேர்ந்து அரிவாள், கம்பி , கம்புகளால் தாக்கி காயப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அழகுராஜாவை தாக்கிய முனியசாமி, மணிகண்டன், நாகேந்திரன், வழிவிட்டான் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்த நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், ஆட்சியர் சந்திரகலாவிடம் கேட்டுக்கொண்டார்.

காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கிஷோர் கே. சாமி மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்த அறிவுரைக் கழகம்!

ABOUT THE AUTHOR

...view details