தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் - காவல்துறை எச்சரிக்கை!

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Police arrest two persons for selling counterfeit goods
Police arrest two persons for selling counterfeit goods

By

Published : Apr 17, 2020, 10:37 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் காய்ச்சக் கூடாது என காவல்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், முதுகுளத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், பொதிகுளம் கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அதே ஊரைச்சேர்ந்த மூன்று பேர் சட்டவிரோதமாக கள்ளச்சராயம் காய்ச்சியது தெரியவந்தது. பின்னர், காவல்துறையினர் வருவதையறிந்த மூவரும் தப்பியோடினர். அதில் சதீஷ்குமார்(29) என்பவர் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இனிமேல் யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருப்பூரில் சட்டவிரோத மது விற்பனை: இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details