தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிய மாமனார் - 8 பேர் மீது போக்சோ வழக்கு - பாலியல் வழக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர், மாமனார் உள்பட எட்டு பேர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Pocso act case
Pocso act case

By

Published : Aug 12, 2021, 9:57 AM IST

ராமநாதபுரம்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு அதிகரிக்கின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 16 வயது சிறுமியை சரண்ராஜ் என்பவர் குழந்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் கணவர், மாமனார் உள்பட எட்டு பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை

தற்போது அந்தச் சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதுதொடர்பாக அந்த சிறுமி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதன்பேரில் கணவர் சரண்ராஜ், மாமனார் யோகிதாஸ் உள்பட எட்டு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடிவருகின்றனர். சிறுமியை வன்புணர்வு செய்த நிகழ்வு பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 21 ஆண்டுகளுக்கு பிறகு வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றம்

ABOUT THE AUTHOR

...view details