தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 மணி நேரத்தில் 18 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யும் முயற்சி - ஆர்வமுடன் பங்கேற்ற ராமநாதபுர மக்கள் - ராமநாதபுரம் மாவட்டம்

12 மணி நேரத்தில் 18 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யும் சாதனை முயற்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

18 லட்சம் பனைவிதைகள் நடவு செய்து  இராமநாதபுரம் மாவட்டம் சாதனை முயற்சி
18 லட்சம் பனைவிதைகள் நடவு செய்து இராமநாதபுரம் மாவட்டம் சாதனை முயற்சி

By

Published : Oct 1, 2021, 6:58 PM IST

ராமநாதபுரம்: மாவட்டம் அதிக அளவில் பனை மரங்களைக் கொண்ட மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 பஞ்சாயத்தில் இன்று (அக்.1) '12 மணி நேரத்தில் 18 லட்சம் பனை மர விதைகளை நடும் விழா' சாதனை முயற்சியாக மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்றது.

இதனை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், கழுகூரணி பகுதியில் தொடங்கி வைத்து பனை விதை நடவு செய்தார். இதனையடுத்து உலக சாதனை நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

விழாவில் பேசிய மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், 'ராமநாதபுரத்தில் பனை மரம் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில், பனை மர விதைகளை நடும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்கு பெருமைப்படுகிறேன்.

ஊரணி கரைகளில் நட்டு வைக்கப்படும் பனைமரங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணிசெய்வோரின் மூலமாக பராமரிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது!'

ABOUT THE AUTHOR

...view details