ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார். மாற்றுத் திறனாளியான இவர் தனது சொந்த நிலத்தில் தாயாருடன் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டிருந்த தாயாருக்கு முத்துக்குமார் உணவு கொடுப்பதற்காக இடுப்பில் ட்யூபை கட்டிக்கொண்டு கண்மாயை கடந்தபோது எதிர்பாராத விதமாக கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.
சாயல்குடி அருகே கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழப்பு - மாற்றுத்திறனாளி இளைஞர் பலி
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்தார்.

physically
இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி தீயணைப்பு துறையினர் சுமார் 15 மணிநேரம் போராடி முத்துக்குமார் உடலை மீட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் முத்துக்குமாரின் சடலத்தை உடற்கூராய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!