ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாற்றுத்திறனாளி பொன்னிருளு. இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி பொன்னிருளு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு நாட்கள் சிகிச்சைக்குப்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன. 27) பொன்னிருளு உயிரிழந்தார்.