தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உதவித்தொகையை உயர்த்துக, இடஒதுக்கீடு அமல்படுத்துக': மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! - மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: காவல்துறையின் தடையயும் மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் பரபரப்பு

By

Published : Feb 9, 2021, 7:31 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் சார்பாக இன்று (பிப்.9) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.5000ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூறியதைத் தொடர்ந்து அவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

இதையும் படிங்க... அரசு அலுவலக கழிப்பறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குமானதா?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details