தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பியை கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஓட்டம்! - Person killed his own brother

ராமநாதபுரம்: திருவாடானை அருகே சகோதரரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தம்பியை கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஓட்டம்!
தம்பியை கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஓட்டம்!

By

Published : Jun 30, 2020, 8:03 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசனுக்கு பார்த்திபன், வேலு என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த வருடம் இறந்தவிட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைபார்த்து வந்த நிலையில், கரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார்.

அப்போது, சகோதரர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜூன் 29) காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், பார்த்திபனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு வேலு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக பார்த்திபனின் மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில், திருவாடானை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான வேலுவை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details