ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஏழை எளிய மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் குறிப்பிட்ட இரண்டு எலும்பு முறிவு மருத்துவர்கள் ஏஜெண்டுகளை நியமித்து வரும் நோயாளிகளை தனது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் கூட்டமைப்பினர்! - Periyar Coalition to engage in begging struggle
ராமநாதபுரம்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கண்டித்து பெரியார் கூட்டமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடனர்.
Periyar kootamaipu to engage in begging protest
அது மட்டுமில்லாமல் மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரைகளை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுடைய மருத்துவமனைக்கு எடுத்து செல்கின்றனர். இதனைக் கண்டித்து பெரியார் கூட்டமைப்பினர் அரண்மனை முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். மேலும் போராட்டத்தில் காயமடைந்தவர் போன்று இருக்கும் அவர் மருத்துவருக்கு பிச்சை போடுவது போல நடித்து காண்பித்தார்.
இதையும் படிங்க:குமரியில் வெறிச்செயல்... தமிழ்நாட்டு பிச்சைக்காரரை அடித்துக்கொன்ற வடமாநில நபர்!