ராமநாதபுரம்:உலக பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான யாத்திரைகள் வந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு, கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம், சீதா, வில்லூண்டி, லட்சுமணன், ஜடாயு உள்ளிட்ட தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு சென்றால் தான் தங்களுடைய பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும் என்ற ஒரு ஐதீகம் உள்ளது.
தற்போது கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பின்றி கிடக்கும் ராமர், சீதா தீர்த்தங்கள்