தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்கிறோம்... ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள்! - Tears of living on the Cottage Transfer Board

ராமநாதபுரம்: குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி ஆட்சியரிடம் பட்டினம் காத்தான் மக்கள் மனு அளித்தனர்.

people
people

By

Published : Feb 18, 2020, 12:38 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சத்தியா நகர் பகுதியிலிருந்து அரசு தரப்பில் இடம் ஒதுக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிறது.

ஆனால், இதுவரை குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏதுமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து குடிசை மாற்று வாரிய அலுவலர்களிடம் மனு அளித்தும் பயனில்லை. நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பட்டினம் காத்தான் பகுதி மக்கள் ஆட்சியர் வீர ராகவ ராவிடம் மனு அளித்தனர்.

அடிப்படை வசதி கேட்கும் மக்கள்

இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் வீர ராகவ ராவ், இது குறித்து குடிசை மாற்று வாரியம் மற்றும் துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘ஸ்டாலின் மன்னிப்பு கேட்கச் சொன்னார்’ - ஆர்.எஸ். பாரதி

ABOUT THE AUTHOR

...view details