தமிழ்நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்கையில் தண்ணீர் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீருக்காக கிராம மக்கள் தள்ளு வண்டிகளுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஊரணி குளத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன்குளம் கிராமம்! - Alagan kulam Village
ராமநாதபுரம்: சரியான நேரத்தில் ஊரணி குளம் துர்வாரப்பட்டதால் தண்ணீர் பிரச்னையின்றி வாழும் அழகன்குளம் கிராம மக்கள், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க குளங்களைத் துர்வார வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்..
தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிய அழகன் குளம் கிராம மக்கள்..
இந்த ஊரணி குளம் தண்ணீர் மூலம் அருகே உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து ஊர் நம்மிடம் பேசிய ஊர் பொதுமக்கள், “100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊரணியை கிராம மக்கள் தூர்வாரினர். இதனால் வறட்சியான காலங்களிலும் இந்த ஊரணியில் நீர் உள்ளது. இதேபோல், அனைவரும் அவர்களது பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களை முறையாக தூர்வாரினால் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்” என கருத்து தெரிவித்தனர்.