இராமநாபுரம்:தமிழ்நாட்டில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு நாள்களுக்கு அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதனையொட்டி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அரண்மனை, சந்தைப் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சில இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதை பார்க்க முடிந்தது. காவல்துறையினர் முக்கிய இடங்களில் நின்று மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அதிக நபர்கள் உள்ள கடைக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.