தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: வானில் பட்டம் பறக்கவிட்டு பொழுதைக் கழிக்கும் மக்கள்! - பட்டம் பறக்கவிட்டு பொழுதை கழிக்கும் ம

ராமநாதபுரம்: ஊடரங்கு உத்தரவால் வீட்டில் முடங்கியிருந்த மக்கள், வானில் பட்டம் விட்டு பொழுதைக் கழிக்கின்றனர்.

ஊரடங்கு: வானில் பட்டம் பறக்கவிட்டு பொழுதை கழிக்கும் மக்கள்!
ஊரடங்கு: வானில் பட்டம் பறக்கவிட்டு பொழுதை கழிக்கும் மக்கள்!

By

Published : Apr 20, 2020, 4:10 PM IST

Updated : Apr 20, 2020, 6:11 PM IST

1990-களில் பிறந்தவர்களுக்கு பட்டம் விடுதல் என்பது கோடைகாலத்தில் மிக முக்கியமான பொழுதுபோக்கு. தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தியது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக, அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு மக்களை பழைய பொழுதுபோக்குகளை நோக்கி நகர்த்துகிறது.

வானில் பட்டம் பறக்கவிட்டு பொழுதைக் கழிக்கும் மக்கள்!

இதையடுத்து, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 90-களில் பிறந்த பலர், மீண்டும் பட்டம்செய்து பறக்கவிடத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் தம்பி, தங்கைகளுக்கும் செய்து கொடுத்து, மகிழ்ந்துவருகின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் மருதுபாண்டி, ”ஊரடங்கால், நாங்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறோம். எங்களுடைய மன அழுத்தத்தைப் போக்கும்விதமாக, நாள்தோறும் மாலை வேளைகளில் மாடியிலிருந்து பட்டங்களை பறக்கவிடுகிறோம். இதன்மூலமாக, எங்களுக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்படும் சிகை திருத்தும் கலைஞர்கள் வாழ்வாதாரம்!

Last Updated : Apr 20, 2020, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details