தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவாக்சின் இல்லாததால் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாத மக்கள்! - கோவாக்சின் தடுப்பூசி மருந்து

ராமநாதபுரம்: இலவசத் தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் கரோனா தடுப்பூசி கிடைக்காததால் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

People who did not come forward to get the covax vaccine!
People who did not come forward to get the covax vaccine!

By

Published : May 29, 2021, 3:32 PM IST

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை அரசு வழங்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் தடுப்பூசி முகாம்கள் அமைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி வருகின்றனர்.

இம்முகாம்களில் கோவிசீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதால், பெரும்பாலான பொதுமக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி கிடைப்பதில்லை. இதனால், பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளமால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலுகாக்களில் இலவச தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details