தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 100 தெருக்களில் கரோனா தொற்று பரவியதால் மக்கள் அச்சம்! - People are scared as corona infection

ராமநாதபுரம் அருகே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் வேலிகளைக் கொண்டு அடைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரத்தில 100 தெருக்களில் கரோனா தொற்று பரவியுள்ளதால் மக்கள் அச்சம்.
ராமநாதபுரத்தில 100 தெருக்களில் கரோனா தொற்று பரவியுள்ளதால் மக்கள் அச்சம்.

By

Published : May 12, 2021, 3:11 PM IST

ராமநாதபுரம்: நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் கரோனா பரவியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் நோய்ப் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் வேலிகளைக் கொண்டு அடைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும்; அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வெளியில் வரவேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இறந்தவரின் பரிந்துரைச் சீட்டைப் பயன்படுத்தி ரெம்டெசிவிர் வாங்க முயற்சி - 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details