ராமநாதபுரம் பேருத்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பேருந்து வரும் வரை காத்திருக்க இரண்டு அறைகள் உள்ளன. ஒன்று பேருந்து வெளி செல்லும் பகுதி அருகேயும், மற்றொன்று பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறைக்கு அருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு அறைகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசி வந்தன.
பேருந்து நிலையத்தில் பாலியல் தொழில் - கண்காணிக்க தவறியதா காவல்துறை?
ராமநாதபுரம்: பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காத்திருப்பு அறையை கடையாக மாற்றிவிட்டதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதை முறையாக பராமரிக்க நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு மேல் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பயணிகள் காத்திருக்கும் அறை கடையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பையா கூறுகையில், இந்த காத்திருப்பு அறையில் குடிப்பது, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் தொடந்து நடைபெறுகின்றன. இதனால் இதனை கடையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.