ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள இளங்காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன்-ஆராயி தம்பதி. இவர்களது மகன் பாலசுப்பிரமணியன் (28). தொழிற்பயிற்சி முடித்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரேபிய நாடான சவுதிக்குச் சென்று அங்கு தபுக் என்ற இடத்தில் உள்ள ஹில்வா ஹெல்த் வாட்டர் போட்டிங் நிறுவனத்தில் தங்கி லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.
இவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் அவரது தாய் ஆராயிடம் மகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி பாலசுப்பிரமணியன் விபத்தில் இறந்துவிட்டதாகப் பெற்றோருக்குத் தகவல் வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள உறவினர்கள் மூலம் விசாரித்து தகவலை உறுதிசெய்தனர்.