ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள கெந்தமாதனபர்வதம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சண்முகம். இவரின் மகள் அருணா சிறு வயதில் எலும்பு சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் அருணா கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை, ஆனால் தனியார் மருத்துவமனையில் இதை சரிசெய்ய முடியும், 12 முதல் 15 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு. - pettition
ராமநாதபுரம்: எலும்பு சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு சண்முகம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சண்முகம் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால், மகளுக்கு மருத்துவ உதவி செய்யக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மகளை வீல் சேர் உதவியுடன் அழைத்து வந்து மனு அளித்தார். அப்போது ஆட்சியர், அலுவலர்கள் மூலம் தேவையான உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.