ராமநாதபுரம்:இந்தோனேசிய சிறையில், பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 15 நாள்களாக சிக்கித் தவித்துவருகிறார். அவரை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த கோபால் - லட்சுமி தம்பதியரின் மகன் கவின். இவருக்குத் திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளாக, சென்னையிலுள்ள தனியார் கம்பெனி மூலம் வெளிநாட்டில் பணிபுரிந்துவருகிறார். கப்பலில் பணிசெய்யும் அவர், ஜூன் 8 ஆம் தேதி விடுமுறை கிடைத்து இந்தோனேசியா துறைமுகத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக, கவினும், அவருடன் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் புறப்பட்டனர்.
ஆறு பேரும் இந்தோனேசியா விமான நிலையம் சென்றனர். அங்கு அவர்களை குடியேற்ற அலுவலர்கள் விசாரணை செய்து, பாட்டம் என்ற இடத்தில் சிறைவைத்துள்ளனர்.
காரணம் ஏதும் கூறாமல், ஆறு பேரையும் இந்தோனேசிய அரசு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறைப்பிடித்து வைத்துள்ளது.
இதுகுறித்து கவினின் மனைவி ரேவதி கூறுகையில், "ஜூன் 8 ஆம் தேதி இந்தோனேசியா விமான நிலையத்தில் இருப்பதாகவும், 10 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்து விடுவேன் எனக் கூறினார்.