தனது சொந்த செலவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட டி. கல்லுப்பட்டி அருகே குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவு திருக்கோயில் கட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இக்கோயிலுக்கு நாளை (ஜன.30) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர் காப்புக்கட்டி விரதம் இருந்தார்.
அத்துடன் பரமக்குடியில் இருந்து குன்னத்தூர் வரை நடைபயணமாக நரிக்குடி, காரியாபட்டி வழியாக பாதை யாத்திரை செல்ல புறப்பட்டுள்ளார். இந்த பாதயாத்திரையை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தொடங்கி வைத்தார். இன்று (ஜனவரி 29) காலை தொடங்கி 30ஆம் தேதி கோயிலுக்கு செல்கிறார்.
தமிழர் குலசாமி அம்மா என்ற முழக்கத்துடன் பரமக்குடி எம்எல்ஏ பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் பாதயாத்திரையாக ஜெயலலிதாவின் கோயிலுக்கு நடந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!