ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் 429 ஊராட்சித் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடியும் நிலையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் நிதி பற்றாக்குறை தொடர் பிரச்னையாக உள்ளது. ஆகவே ஊராட்சிக்கு வழங்கப்படும் மாநில நிதி ஆணையம் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் ஊராட்சியில் ( MGNREGS ) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஊராட்சிமன்ற தலைவர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய 15ஆவது நிதிக்குழு மானியத்தை ஊராட்சியின் அடிப்படை வசதிகளை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.
மக்களோடு மக்களாக முழுநேர ஊழியராக செயல்படும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைபோல் மாதம் ரூ 30,000 சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும். ஊராட்சியின் வளர்ச்சி பணிகளில் ஒன்றியக்குழு தலைவர்களின் குறுக்கீடுகளை தடுக்க வேண்டும், பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஊராட்சிமன்ற தலைவர்களின் முழுமையான அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: கரோனாவை பரப்புகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்