தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் கடலுக்குச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் முடிந்து 63 நாள்களுக்குப் பிறகு, பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜூன் 17) கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள்
மீனவர்கள்

By

Published : Jun 17, 2021, 11:06 AM IST

ராமநாதபுரம்: கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து ஜூன் 15ஆம் தேதிவரை அரசால் மீன்பிடித் தடைக்காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளைப் பழுதுநீக்கும் பணி, இயந்திரக் கோளாறுகளைச் சரிசெய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த 63 நாள்களுக்குப் பிறகு, இன்று (ஜூன் 17) பாம்பன் பகுதியைச் சேர்ந்த 95-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

தடைக்காலம் முடிந்து செல்வதால் நல்ல மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பொருளாதாரச் சிக்கல்களை தற்போது ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் எனவும் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : அணை நிரம்பியதால் நீர் திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details