தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் புயல் கொடிக்கம்பத்தில் பழுது நீக்கும் பணி தீவிரம்! - புயல் கூண்டு

இராமநாதபுரம்: பாம்பன் துறைமுகத்தின் புயல் கூண்டு கொடிமரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

post
post

By

Published : Dec 7, 2020, 3:04 PM IST

இலங்கையில் கரையைக் கடந்து தொடர்ந்து பாம்பன் அருகே புரெவி புயல் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படட்டது. ஆனால், புயல் வலுவிழந்து தற்பொழுது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது இராமநாதபுரம், இராமேஸ்வரம், பாம்பன் என மாவட்டம் முழுவதும் சாரல் மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் கூண்டு இறக்கப்பட்டு, கொடிமரத்தில் உள்ள கம்பிகளில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை நீக்க மரத்தாலான சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் புயல் கொடிமரத்தின் நடுப்பகுதியில் 4 கம்பிகள், அதற்கு மேல் 4 மற்றும் உச்சியில் 2 என பொருத்தப்பட்டு புயல் கூண்டை நிலை நிறுத்த உதவும். இந்த 10 கம்பிகள் தற்போது மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் புயல் கொடிக்கம்பத்தில் பழுது நீக்கும் பணி தீவிரம்!

இதையும் படிங்க: வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details