தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பனில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு; சீற்றம் தீவிரமடையும் என எச்சரிக்கை - AMPHAN storme

ராமேஸ்வரம்: ஆம்பன் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலின் சீற்றம் தீவிரமாக இருக்கும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

pamban-port-authorities
pamban-port-authorities

By

Published : May 18, 2020, 8:16 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலர்கள் ஆம்பன் புயல் காரணமாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றியுள்ளனர். இதுகுறித்து கூறிய அலுவலர்கள், "இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிவித்துள்ளபடி, ஆம்பன் புயலின் சீற்றம் தீவிரமாக இருக்கும்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த சனிக்கிழமை இரவு புயலாக உருவானது. இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி நகரும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியதைக் குறிக்கும் வகையில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே அறிவித்தபடி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என எச்சரித்தனர்.

இதையும் படிங்க:ஆம்பன் புயல் - குமரியில் பலத்த கடல் சீற்றம்

ABOUT THE AUTHOR

...view details