தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எந்த நேரத்திலும் பனை கள் இறக்க அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் க. பாண்டியராஜன் - பனை மர கல் இறக்க அனுமதி உண்டு

ராமநாதபுரம்: பனை கள் இறக்க அனுமதி வழங்குவதில் அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

minister pandiarajan
minister pandiarajan

By

Published : Mar 16, 2020, 12:00 AM IST

இராமநாதபுரத்தில் பனை மரத்தை காப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் தொடங்கி பதநீர் மஹாலில் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் பனைமரம் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் விழாவில் பேசுகையில், "1947 ஆம் ஆண்டின் கணக்கின்படி தமிழ்நாட்டில் 5.1 ஒரு கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது அதற்கான கணக்கெடுப்பு சரிவர இல்லை அதனை விரைவில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். பனைமரம் மூலமாக செய்யப்படும் அழகு சாதன பொருட்களை சந்தைப்படுத்த புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டு இதன் மூலம் பனை பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு சலுகைகளை உருவாக்க தமிழ்நாடுஅரசு திட்டம் வைத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை பனைமர அமைப்பினர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதில் மிக முக்கியமாக பனை கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இதனை கவனத்தில் கொண்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை மக்கள் வெறுத்து வரும் நிலையில், பனை கள் அனுமதி வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் அரசுக்கு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைபோல் பரவும் கரோனா வைரஸ் - ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details