தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி தொடக்கம் - ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இராமேஸ்வரம் பாம்பன் பாலம்
இராமேஸ்வரம் பாம்பன் பாலம்

By

Published : Dec 28, 2020, 4:51 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் போக்குவரத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து காணப்பட்டது.

இந்நிலையில், புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து, பாம்பன் தென் கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், பழைய பாம்பன் பாலம் வழியாகவே தற்போது வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாலத்தில் கடல் காற்றினால் ஏற்படும் அரிப்பை சரிய செய்ய, சிறிய கால இடைவெளியில் பாலத்திற்கு வண்ணம் பூசப்படுவது வழக்கம்.

பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் வண்ணம் பூசும் பணி

அந்தவகையில், தற்போது ரயில்வே அலுவலர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் பத்திற்கும் மேற்பட்ட வண்ணம் பூசும் ஊழியர்கள் அந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது முடிவடையை இரு வாரத்திற்கு மேல் ஆகலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்!

ABOUT THE AUTHOR

...view details