கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து திரையரங்கத்தின் ஊழியர்கள் திரையரங்குகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்ததால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.