தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 1 கோடியே 12 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்! - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், இன்று வரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
ராமநாதபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

By

Published : Mar 23, 2021, 7:07 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சேகர் தலைமையிலான அலுவலர்கள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ஆறு லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. பறிமுதல்செய்யப்பட்ட பணம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோன்று பரமக்குடி அருகே உள்ள சிம்பூர் சோதனைச்சாவடியில் சந்திரமோகன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த சிவசக்தி சில்வர் கடை உரிமையாளர் சிவானந்தம் என்பவர் எந்தவித உரிய ஆவணங்களுமின்றி எடுத்துச் சென்ற 24 கிலோ வெள்ளி பொருள்களும் பறிமுதல்செய்யப்பட்டன.

இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 94 தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மொத்தமாக ஒரு கோடியே 12 லட்சத்து 98 ஆயிரத்து 890 பணம், பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உரிய ஆவணத்தைக் காட்டிய பின்பு 67 லட்சத்து 76 ஆயிரத்து 460 ரூபாய் மதிப்பிலான பொருள்கள், பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: ஒரேநாளில் 40,715 பேருக்குப் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details