தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள் - பாஜக இளைஞரணித் தலைவர்! - முக்கிய கட்சி பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள்

ராமநாதபுரம்: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் வினோஜ் தெரிவித்துள்ளார்.

பாஜக இளைஞரணி தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு
பாஜக இளைஞரணி தலைவர் செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Sep 4, 2020, 9:52 AM IST

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பரமக்குடி நகர் வழியாக வர முற்பட்டபோது, காவல் துறை வாகனத்தை வழிமறித்து நெடுஞ்சாலையில் செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதனால் பாஜகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நகர் வழியாக ராமநாதபுரம் வந்தனர்.

இதனையடுத்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ், “செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் கலந்துகொள்ள பேருந்து வசதி இல்லாத மாணவ மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி செய்யப்படும். அதற்காக ஒரு இலவச தொலைபேசி எண் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாஜக இளைஞரணித் தலைவர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “முன்பு அதிமுகவிலிருந்து திமுகவிற்கு, திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறினர். ஆனால் தற்போது எந்தக் கட்சியிலிருந்து விலகினாலும் பாஜகவில்தான் இணைகிறார்கள்.

நிறைய பேர் பாஜக தலைவர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறார்கள். நிச்சயமாகத் தேர்தல் சமயத்தில் பல கட்சிகளிலிருந்தும் முக்கியப் பிரமுகர்கள் பாஜகவில் இணைவதற்கான சாத்தியக்கூறு இருந்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க...’ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க பணமில்லை’ - கலங்கி நிற்கும் குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details