ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையான குடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரவில்லை என கூறி, சில நாள்களுக்கு முன்பாக தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தப் பலரும் வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி எதிர்கட்சியினர் மனு!
ராமநாதபுரம்: அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அனுயளிக்கப்பட்டது.
திமுக
இன்று ராமநாதபுரம் நவாஸ் கனி எம்.பி. உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் சந்தித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனே செய்து தர வேண்டும் என மனு அளித்தனர்.