இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கண்கொல்லான் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ருத்ரகுமார்(42). இவர் மீன் பிடிப்பதற்காக வீட்டில் வெடி பொருட்கள் வைத்திருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வெடி பொருட்கள் வைத்திருந்த மீனவர் கைது - வெடி பொருட்கள் வைத்திருந்த மீனவர் கைது
இராமநாதபுரம் : தொண்டி அருகே மீன் பிடிப்பதற்காக வீட்டில் வெடி பொருட்கள் வைத்திருந்த மீனவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
![வெடி பொருட்கள் வைத்திருந்த மீனவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4714936-823-4714936-1570750865395.jpg)
One fishermen have arrested for keeps detonator for fishing
தகவலின் அடிப்படையில் தொண்டி காவல் துறையினர் நேற்றிரவு ருத்ரகுமார் வீட்டைத் திடீரென சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் 20 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டர்கள், நான்கு மீட்டர் ஃப்யூஸ் வயர் ஆகியவற்றைக் கைப்பற்றினர். மீனவர் ருத்ரகுமார் வெடி பொருட்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்த தொண்டி காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : கரை ஒதுங்கிய இலங்கை படகு - பயங்கரவாதிகள் ஊடுருவலா என்ற கோணத்தில் விசாரணை!