தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டிக் டாக்' பிரபலங்களை ஆபாசப் படம் எடுத்து பணமோசடி; ஒருவர் கைது! - Ramanathapuram Latest News

டிக் டாக் பிரபலங்களை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் எனக் கூறி, ஆபாச படம் எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/13-October-2021/13347874_tiktok.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/13-October-2021/13347874_tiktok.jpg

By

Published : Oct 13, 2021, 9:42 PM IST

ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர், இமானுவேல் ராஜா (எ) சக்தி.

இவர் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அடிக்கடி வெவ்வேறு பெண்களை அழைத்து வந்து, அங்குள்ள கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

இதனைக் கண்டு சந்தேகமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர் கார்த்திக் ராஜா, இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இமானுவேலைப் பிடித்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

ஆசை வார்த்தை - ஆபாச படம்

அப்போது தடை செய்யப்படுவதற்கு முன்னர் 'டிக் டாக்'கில் பிரபலமானோர், ஃபேஸ்புக் பிரபலங்கள் உள்ளிட்டப் பெண்களை இமானுவேல் தொடர்பு கொண்டுள்ளார்.

மேலும் பெண்களின் அலைபேசி எண்ணை வாங்கி, அவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட நபர்

இதனை நம்பி ஏமாந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களை, தொடர்ச்சியாக ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் விடுதியில் உடன் தங்கும் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து, அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து இமானுவேல் ராஜாவை உடனடியாக கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டு, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கைவிட்ட அதிர்ஷ்டம்.... ஐபில் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details