தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 தூய்மைப் பணியாளர்களுக்கு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிவாரணம் - ராமேஸ்வரம் மாவட்டம் செய்திகள்

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக நகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Sanitary workers Old school rameswaram
Sanitary workers Old school rameswaram

By

Published : May 27, 2021, 4:09 PM IST

ராமநாதபுரம் :கடந்த 1985-86ஆம் ஆண்டில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இணைந்து, விழுதுகள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த அறக்கட்டளையின் மூலமாக கடந்த ஆறு ஆண்டுகளாக ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 10, 12ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

மேலும், பாலித்தீன் ஒழிப்பு, மரம் வளர்த்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு, ஒரு நபருக்கு ரூ.600 வீதம் அரிசி, பருப்பு அடங்கிய மளிகைப் பொருட்களை வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details